Wednesday, November 2, 2011
பாடசாலைக் கீதம்
வாழிய தமிழ்மத்திய மகாவித்தி யாலயம்
வாழிய வாழிய வே !
வையகம் உள்ள வரைக்கும்நீ வாழிய
வாழிய வாழிய வே !
வண்டல் வளத்தால் வயல்கள் செழித்திடும்
வன்னி நகருறை நின்
கொண்டல் நிகர்கல்வி குறையா தளிர்த்தென்றும்
வாழிய வாழிய வே !
செந்தமிழ், ஆங்கிலம், தீஞ்சுவை இன்னிசை
சிறப்புறு விஞ்ஞா னம்,
அந்தமில் கைத்தொழில் கமத்தொழில் உடற்கலை
எண்கலை நுண்கலை யும்,
நேர்மையோ டொழுக்கமும் நிறைவுற அளித்திடும்
செம்பொன் னிறமுடை நின்
( வாழிய…. )
அதிபரின் எண்ணத்தில் உதித்தவை…
வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் தற்போது 50ஆண்டுகளைக் கடந்து பொன்விழா நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இக்காலப்பகுதியில் அதிபராககடமையாற்றும் நான் கல்லூரியின் இணையத்தளத்திற்கு எனதுமன எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சிஅடைகிறேன்.
இக்கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவனான நான் அதிபராககடமையாற்றும் பாக்கியம் இறைவனால் தரப்பட்ட நற்பணியெனகருதுகின்றேன். வவுனியா மாவட்டத்தின் நகரப்பகுதியில்அமைந்துள்ள இக்கல்லூரி ஆற்றிய பணி காலத்தால் அழியாதது,இதற்கு சான்றாக பலதுறைகளிலும் இக் கல்லூரியின் பழையமாணவர்கள் சிறப்புற மிளிர்வதைக்கண்டு கல்லூரித்தாய் சுகமகிழ்வது மட்டற்ற மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும்கொடுக்கின்றது. ஒரு சமூகத்தின் கல்விக்கண்ணைத் திறந்துசமுதாயத்தை உன்னத நிலையை அடைய வைப்பது கல்விக்கல்லூரிகளேயாகும். எனவே அதனை பெளதீக மனிதவள ரீதியாகநன்கு பராமரித்து செயற்படுத்துவதன் ஊடாக மாணவர்களின்பாடவிதான, இணைப்பாடவிதான விடயங்களுடன் ஒழுக்கம்,பண்பாடு, கலாசாரம், விழுமியங்களையும் போன்ற பலவற்றுடன்சமூகத்திற்கு சிறந்த நற்பிரஜைகளை வழங்க வேண்டிய பாரியபொறுப்பு அதிபரிடமும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகளிடம் விடப்பட்டுள்ளது.எனவே கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தவும் மாணவர்களின்அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும்,ஆசிரியர்களின்தங்குமிட வசதிகளை மேம்படுத்தவும் மேற்குறித்த அனைவரும்ஒன்றிணைய வேண்டிய கட்டாய தேவையுள்ளது. அவ்வாறுஇணைந்து செயற்படுவதன் மூலம் பின்வரும் அவசரமான,அத்தியாவசியமான தேவைகளை நிறைவு செய்து கல்லூரித்தாயைமேலும் வலுவுள்ளதாக்க முடியும்.
· வகுப்பறைக் கட்டிடங்கள்
· தண்ணீர், மலசல கூடங்கள் சீரமைப்பு
· ஆசிரியர் விடுதி தொகுதி
· அதிபர் விடுதி
· ஒன்றுகூடல் மண்டபம்
· மைதான புரணமைப்பு (400 ஓடுபாதையுடன்)
· ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் கல்லூரியின் முன்பக்கம்,உள்ளகம் யாவற்றையும் அழகுபடுத்தல்
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், வர்த்தகபெருமக்கள் அனைவரதும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
·விளையாட்டு,அழகியல்,என்பவற்றுடன்,ஒட்டுமொத்தமான,கல்வி அபிவிருதிக்கான,கற்பித்தல்,துணைச்சாதனங்களைபெற்றுக்கொள்ளல்.
மூலம் :- http://www.vtmmv.sch.lk
Subscribe to:
Posts (Atom)